ஊர் முற்றம் – 06

நவம்பர் 12, 2016

இது உங்களின் முகம்….
ஊரின் ஆவணப்படம்

காரைநகர் பகுதி 02- யாழ்ப்பாணம் மாவட்டம்

Advertisements

ஊர் முற்றம் – 05

நவம்பர் 12, 2016

இது உங்களின் முகம்….

ஊரின் ஆவணப்படம்
காரைநகர் பகுதி 01- யாழ்ப்பாணம் மாவட்டம்


ஊர் முற்றம் – 03

நவம்பர் 12, 2016

இது உங்களின் முகம்….ஊரின் ஆவணப்படம்

பண்டத்தரிப்பு – யாழ்ப்பாணம் மாவட்டம்


ஊர் முற்றம் – 02

நவம்பர் 12, 2016

இது உங்களின் முகம்….

ஊரின் ஆவணப்படம்

எழுவான் கரை –  மட்டக்களப்பு மாவட்டம்


ஊர் முற்றம் – 01

நவம்பர் 12, 2016

இது உங்களின் முகம்….

ஊரின் ஆவணப்படம்.

கள்ளப்பாடு – முல்லைத்தீவு மாவட்டம்


காதல் மொழி- யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி(காணொளி)

பிப்ரவரி 13, 2012
காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது.தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப் இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இக் காணொளி யாழ்-மியூசிக்
 நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இக்கலைஞர்களை வாழ்த்துவோம்

Lyrics:
இதயம் பேசும் மௌன மொழி – அது
உனையும் எனையும் இணைக்கும் வழி
அகமும் புறமும் இரண்டு விழி – அது
அன்பில் திளைத்திடும் காதல் மொழி

ஆதி முதல் காதல் தான் உண்மை
ஜாதி மத பேதம் இங்கில்லை
அன்பே இறைவனின் குணமது…

என் தாயுமாகினாய்
உயிர்க் காதலி நீயே – இந்த
ஜென்மம் கொண்ட பிறவிப் பயனும்
நீயே அன்பே…

வாழ்வென்பது ஒரே ஒருமுறை
வாய்ப்பும் வரும் ஒருதடவை – உண்மைக்
காதல் உன்னைத் தேடி நிற்குதே
வா வா என் நண்பனே

ஜாதி இன மத மொழி பேதம் இங்கின்றி
ஆடல் பாடல் ஊடல் உணர்தல் இவையொடு
இனிதின் நுகரும் இமையோர்க்கு இன்குரலாய்
எழில் கொள் இறைவனின் இந்திரவிழா
காமன்விழா வேனில்விழா
வசந்தவிழா காதலுக்கோர் திருவிழா

காலம் மாறிப்போகும் – வாழ்வின்
கோலம் சாயம் போகும் – உண்மைக்
காதல் கொண்ட நெஞ்சம் என்றும் ஓய்ந்து போகுமா?

வானின் நீலம் அற்றுப்போகும் – கடலில்
நீரும் வற்றிப்போகும் – காதல்
காயம் கொண்ட உள்ளம் மட்டும் ஆறாதம்மா…

ரோமியோவின் காதல் – லைலா
மஜ்னு கொண்ட காதல் – சாஜகானின்
தாஜ்மகாலாய் காதல் சின்னமானதே..

அன்பைச் சொல்லத் தூது
கோடி வார்த்தைக் ஈடு ஏது? – ரத்த
ரோஜா ஒன்றே காதல் சொல்ல போதுமானதே..

என் தாயுமாகினாய்…

தமிழன் காதலி தாய்த் தமிழாகிட ஏங்கிடும்
ஒரு சிறு கவிஞன் நான்
தமிழ்தான் எந்தன் காதலி என்றே
யாழிசை மீட்டிடும் கலைஞன் நான் – 2

இதயம் பேசும்…(1)


“என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா”

ஜனவரி 2, 2012

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.
அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள”என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ராலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

தமிழ் கொலைவெறி – யாழ்ப்பாணம்
TAMIL KOLAIVERI JAFFNA VERSION

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா… – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு — தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!

ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் – தமிழில்..!
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் – தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல — அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…