இது திருட்டு விசிடி அல்ல-இது மென்பொருள் வல்லுனர் நம்ம தேவாவின் திருவிளையாடல்-;)-வீடியோ

ஓகஸ்ட் 19, 2008
Advertisements

2008 ஒலிம்பிக் கோலாகலமாக துட‌ங்கியது

ஓகஸ்ட் 8, 2008

பீஜிங் : உலகின் 660 கோடி மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கும் ஒரே விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலை நகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கியது. சீனர்களுக்கு 8 எனும் எண் மிக ராசியானதாகக் கருதப்படுவதால், துவங்கும் தேதி மற்றும் நேரம் எல்லாமே 8 தான். இரவு 8 மணி 8 நிமிடம் 8 வினாடிக்கு துவக்க விழா நடைபெற்றது. கனடாவின் செலின் டியோன் தைவானின் ஜே ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் திறமையை வெளிப்படுத்தினர்.

ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன. சீனாவிலிருந்து அதிகபட்சமாக 639 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து 596 வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இதற்குமுன்பு இவ்வளவு பேர் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்றது இல்லை. இந்தியாவிலிருந்து 55, பாகிஸ்தானிலிருந்து 21, இலங்கையிலிருந்து 8 வீரர்களும் பங்கேற்கின்றனர். டோகோ, நவ்ரு உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து குறைந்தபட்சமாக தலா ஒரு வீரர் பங்கேற்கிறார்.

பீஜிங்கில் நடைபெறும் போட்டிகளை தவிர, ஹாங்காங்கில் குதிரையேற்றப் போட்டிகள் நடக்கின்றன. ஆகவே, ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன் முறையாக இரு தேசிய ஒலிம்பிக் கமிட்டி இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்றன. சீனாவுடன் ஹாங்காங் இணைந்துவிட்டாலும், அப்பகுதிக்கான ஒலிம்பிக் கமிட்டி இன்றும் செயல்படுகிறது.2007ம் ஆண்டு வரை பதவிவகித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆன்டனோ சமரிஞ்ச் தற்போது “பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிதான், இதுவரை உலகில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே மிகச்சிறப்பானது’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். “பீஜிங்கில் இப்போதுள்ள பிரச்னைகளை சிலவற்றை கருத்தில் கொண்டாலும், பீஜிங்கை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை’ என்று தற்போதைய ஒலிம்பிக் கமிட்டி தலைவர், ஜேக்ஸ் ரோக் தெரிவித்துள்ளார். உலகை வலம் வந்த ஒலிம்பிக் ஜோதி பிரச்னைகளை சந்தித்தாலும் வெற்றிகரமாக தற்போது பீஜிங் திரும்பியுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டிகள்தான் முதன் முறையாக “ஹைடெபனிஷன் டெலிவிஷன்’ (எச்.டி.”டிவி’) முறையில் ஒளிபரப்பப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும். ஒலிம்பிக் போட்டிகளை 400 கோடிப் பேர் பார்ப்பார்கள் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சங்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறது. சாதனை புரியும் வீரர்களுக்கு இம்முறை இலக்குகள் கடினமாகவே இருக்கும். இம்மாத கடைசி வாரம் வரை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது.


தசவதாரம்

ஓகஸ்ட் 5, 2008

கமல் 10 வேடங்களில் நடித்த‌ ‘தசவதாரம்

அன்று


பணம் பண்ணலாம்

ஓகஸ்ட் 3, 2008

Depacco.com

http://www.thevatk.blogspot.com/

http://www.j-kanth.blogspot.com/