நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !

பிப்ரவரி 8, 2008

நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதென்ன நான்கு விஷயங்கள் ?

1. புகை பிடித்தலை விலக்குதல்
2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்)
3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி
4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம்.

இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க முடியும் எனவும், ஆயுளில் பதினான்கு ஆண்டு வரை

அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் குண்டாகவோ, ஒல்லியாகவோ இருப்பதற்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்து வாழ்ந்தாலே ஆயுள் அதிகரிக்கும் எனவும் கூறி அதே ஆய்வு

வியக்க வைக்கிறது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த நான்கு செயல்களும் இணையும் போது ஆயுள் ஆரோக்கியமாய்

அதிகரிக்கும் என்பது புதிதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் நாமே பொறுப்பாளி என்பதையே இந்த ஆய்வு முடிவும் உரக்கச் சொல்கிறது


உலகின் மிக மெல்லிய லேப் டாப்.

பிப்ரவரி 8, 2008

ll

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

w

மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எனினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.

e

இந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.


நவீனத்தின் அடுத்த மைல்கல்.

பிப்ரவரி 8, 2008

bb

அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது )


சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் !

பிப்ரவரி 8, 2008

கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

1.

உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம்.

1

2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில்.

2

3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் )

3

4. உலகிலேயே மிக உயரமான நாய் 7′.2″ அதன் தோழனான 7.5 ” நாயுடன்

6

5. ஹூலா ஹூப்ஸ் என்னும் இவர் 144 கின்னஸ் சாதனைகளைச் செய்திருக்கிறார். இப்போது அவர் செய்து கொண்டிருப்பது 145 வதுக்கான முயற்சி.

7


ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

பிப்ரவரி 8, 2008

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, வத்தளையில ஒரு இருபது, இருபத்தைந்து வயது இளம் ஆண்.. பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

a

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன

s

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.