ஜூன் 24, 2008
செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.
செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.
2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
1 மறுமொழி |
அறிவியல், கனணி |
நிரந்தர பந்தம்
உமை பதிப்பித்தது.
பெப்ரவரி 8, 2008
நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது.
அதென்ன நான்கு விஷயங்கள் ?
1. புகை பிடித்தலை விலக்குதல்
2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்)
3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி
4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம்.
இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க முடியும் எனவும், ஆயுளில் பதினான்கு ஆண்டு வரை
அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உடல் குண்டாகவோ, ஒல்லியாகவோ இருப்பதற்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்து வாழ்ந்தாலே ஆயுள் அதிகரிக்கும் எனவும் கூறி அதே ஆய்வு
வியக்க வைக்கிறது.
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த நான்கு செயல்களும் இணையும் போது ஆயுள் ஆரோக்கியமாய்
அதிகரிக்கும் என்பது புதிதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் நாமே பொறுப்பாளி என்பதையே இந்த ஆய்வு முடிவும் உரக்கச் சொல்கிறது
Leave a Comment » |
அறிவியல் |
நிரந்தர பந்தம்
உமை பதிப்பித்தது.
பெப்ரவரி 8, 2008

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எனினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.

இந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.
Leave a Comment » |
முந்தைய பதிவுகள் |
நிரந்தர பந்தம்
உமை பதிப்பித்தது.