விண்டோஸின் “விஸ்டா”

ஆகஸ்ட் 13, 2007

    v log

விஸ்டா என்பது எதைக் குறிக்கிறது?   

“விஸ்டா” என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.

மைக்ரோசாப்ட் தனது அடுத்தகட்ட இயங்கும் தளமான விண்டோஸ்  விஸ்டா ஐந்து விதமாக வெளியிடப்படுகிறது..சாதாரண உபயோகத்திற்கு (Home Editions):

  • Windows Vista Home basic
  • Windows Vista Home Premium
  • Windows Vista Ultimate

அலுவலக உபயோகத்திற்கு (Business Editions):

  • Windows Vista Business
  • Windows Vista Enterprise

vvv

முற்றிலும் புதிய சில வசதிகள் இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கின்றன.

ஹார்ட்வேர் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏரோ கிளாஸ் எனப்படும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், கூடுதலான வழிகளில் தேடி அறியும் வசதி, புதிய ஆடியோ சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு போன்ற விஸ்டா தரும் வசதிகள் பெரும்பாலும் புதியனவாகத் தான் இருக்கின்றன. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் கம்ப்யூட்டரில் பதித்து இயக்க ஹார்ட்வேர் சாதனங்கள் அதற்கிணையான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளிவந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஹார்ட்வேர்
தேவைகளைக் காட்டிலும் தற்போது கூடுதலாகவே தேவை இருக்கும் என கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் எச்.பி. (HP)மற்றும் டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விஸ்டா பதிந்து இயக்கக் கீழ்க்காணும் குறைந்த பட்ச அளவிலான ஹார்ட்வேர் சாதனங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் வடிவமைக் கப்பட்டிருக்க வேண்டும். 800 Ghz வேகம் கொண்ட Processor, குறைந்தது 20 Gb காலி இடம் உள்ள H.D Drive, குறைந்தது 512mb விடியோ ராம்(Ram) கொண்ட கூடுதல் திறனுடன் கூடிய கிராபிக் கார்ட் ஆகியவை சில அடிப்படைத் தேவைகளாகும்.
கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் விஸ்டா சிஸ்டத்தினை எதிர்பார்த்தே அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறிக் கொள்ள பிரச்னை இருக்காது. பழைய எக்ஸ்பி கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர்கள் தங்கள் மெமரியினை கூடுதலாக்க குறைந்த அளவில் பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும். விண்டோஸ் விஸ்டாவின் இன்னொரு சிறப்பம்சம் இது 18 பன்னாட்டளவிலான மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது தான். இந்தியாவில் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

uu
விரைவில் தெலுங்கு மற்றும் மராத்தி உட்பட 13 இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத் நகரில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 வல்லுநர்கள் விண்டோஸ் விஸ்டா வடிவமைப்பில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரிமோட் இணைப்பு, பைல்கள் பேக்கப் மற்றும் பைல் சிஸ்டம் பயன்பாடுகள் ஆகியவற்றில் இவர்களின் திறமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 விஸ்டா  – இதுவரை தெரிந்த புதுமைகளும் வசதிகளும்

1. கம்ப்யூட்டரில் புதிய ஹார்ட் டிஸ்க்கை நிறுவுகையில் அதற்கான டிரைவரை முதலில் பதித்த பின்னரே அதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதித்து வந்தோம். எடுத்துக் காட்டாக தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சடா (SATA) வகை ஹார்ட் டிஸ்க்குகளை அப்படித்தான் பதிக்கிறோம். விண்டோஸ் விஸ்டாவைப் பொறுத்த வரை இது தேவையில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டமே ஹார்ட் டிஸ்க்கைப் புரிந்து கொண்டு அதற்கான டிரைவர்களை வைத்துக் கொண்டு இயங்குகிறது.

2. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள டிவிடி டிஸ்க்கை வைத்து அதனைக் கம்ப்யூட்டரில் பதியும் போது ஏதேனும் காரணங்களால் கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ அல்லது மின் சக்தி வழங்குவது நின்று போனாலோ மீண்டும் முதலில் இருந்து பதிவு வேலையைத் தொடங்க வேண்டியதில்லை. மறுபடியும் விஸ்டா டிவிடியைப் போட்டவுடன் தானாக விட்ட இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து தொடங்கி முடித்து விடும். இதில் பிரச்னை ஏற்பட்டால் தான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு பைலைத் தேடுகிறீர்கள். நாள் வாரியாக அல்லது பேர் வாரியாகத் தேடி ஒரு வழியாகக் கண்டு பிடிக்கிறீர்கள். பின் பைலைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் எப்படி தேடினோம் என்பதனையும் தேடும்போது அதே பெயரில் பெற்ற பிற வகை பைல்கள் என்ன என்ன என்பதனையும் மறந்துவிடுகிறீர்கள். இன்னொரு நாளில் “அடடா அதனைக் குறித்து வைக்க மறந்துவிட்டோமே” என்று ஆதங்கப்படுகிறீர்கள். விஸ்டா இதற்கெல்லாம் வழி தருகிறது. உங்களின் ஒவ்வொரு தேடலையும் \SEARCHES\FOLDER\ என்னும் போல்டரில் பதிந்து வைக்கிறது. ஏதேனும் ஒரு தேடலை மீண்டும் தொடங்கினால் அதனை அப்போது அப்டேட் செய்கிறது. இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது.

4. இப்போது சிஸ்டம் டிரேயில் ஒரு கடிகாரம் இருக்கிறது. நம்மில் பலருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கப்பூரில் அல்லது அமெரிக்காவில் என்ன நேரம் இருக்கும் என்று நமக்குள் கேட்டுப் பார்க்கிறோம். பின் கணக்குப் போட்டு கண்டு பிடிக்கிறோம். இதெல்லாம் விஸ்டாவில் தேவையில்லை. சிஸ்டம் டிரேயில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்துக் கொள்ளலாம். நம் பிரியமானவர்கள் அல்லது தொழில் நண்பர்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தை ஒவ்வொன்றிலும் போட்டு வைத்து அறிந்து கொள்ளலாம்.

5. விளையாட்டுப் பிரியர்களுக்கு நல்ல வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. விளையாட்டு ஒன்றினை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பாதியில் வேறு வேலை இருக்கிறது. இந்த விளையாட்டைப் பாதியில் சேமித்து வைத்து பின் தொடர சில விளையாட்டுக்களில் வசதி உள்ளது. அப்படி எக்ஸ்பியில் நீங்கள் இடையே விட்டுப் போன விளையாட்டுக்களை விஸ்டாவிற்குக் கொண்டு வந்து தொடரலாம்.
விஸ்டாவில் இயங்கும் விளையாட்டுக்களையும் இதே போல தொடரலாம். SAVE GAMES என்ற போல்டரில் இவை தங்குகின்றன. விஸ்டா தரும் GAMES போல்டர் என்பதுவும் விளையாட்டுப் பிரியர்களுக்கு வசதியான ஒன்று. கேம்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் இதில் தங்குகின்றன. இதிலிருந்து விளையாட்டுக்களை இயக்கலாம். விளையாட்டுக்களுக்கெனத் தரப்படும் பேட்ச் பைல்களை இணைக்கலாம். குழந்தைகள் விளையாடாமல் இருக்க தடைகளை உருவாக்கலாம்.

6. வழக்கமான டெக்ஸ்ட் மற்றும் டாகுமென்ட் பைல்களுக்குப் பதிலாக பைல்களை அதிக பாதுகாப்புள்ள எக்ஸ்.எம்.எல். வகையில் பதிந்து கொள்ளலாம். இதற்கு வேர்ட் பிராசசரில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின் பிரிண்ட் கட்டளை கொடுத்து அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் XML Printer என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்து கொள்ள வேண்டும்.

7. மிக முக்கியமான மற்றும் அதிக வசதி கொண்ட பிரிவு விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஆகும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களை வரிசைப் படுத்த பெயர், சைஸ், வகை, திருத்தப்பட்ட தேதி, உருவாக்கப்பட்ட தேதி (Name, Size) எனப் பல வகைகளைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல 45 வகைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் 250 வகைகள் உள்ளன. இவற்றால் பைல்களைத் தேடி அறிவது மிக மிக எளிதாகிறது.


Follow

Get every new post delivered to your Inbox.