2008 ஒலிம்பிக் கோலாகலமாக துட‌ங்கியது

ஆகஸ்ட் 8, 2008

பீஜிங் : உலகின் 660 கோடி மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கும் ஒரே விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலை நகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கியது. சீனர்களுக்கு 8 எனும் எண் மிக ராசியானதாகக் கருதப்படுவதால், துவங்கும் தேதி மற்றும் நேரம் எல்லாமே 8 தான். இரவு 8 மணி 8 நிமிடம் 8 வினாடிக்கு துவக்க விழா நடைபெற்றது. கனடாவின் செலின் டியோன் தைவானின் ஜே ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் திறமையை வெளிப்படுத்தினர்.

ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன. சீனாவிலிருந்து அதிகபட்சமாக 639 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து 596 வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இதற்குமுன்பு இவ்வளவு பேர் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்றது இல்லை. இந்தியாவிலிருந்து 55, பாகிஸ்தானிலிருந்து 21, இலங்கையிலிருந்து 8 வீரர்களும் பங்கேற்கின்றனர். டோகோ, நவ்ரு உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து குறைந்தபட்சமாக தலா ஒரு வீரர் பங்கேற்கிறார்.

பீஜிங்கில் நடைபெறும் போட்டிகளை தவிர, ஹாங்காங்கில் குதிரையேற்றப் போட்டிகள் நடக்கின்றன. ஆகவே, ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன் முறையாக இரு தேசிய ஒலிம்பிக் கமிட்டி இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்றன. சீனாவுடன் ஹாங்காங் இணைந்துவிட்டாலும், அப்பகுதிக்கான ஒலிம்பிக் கமிட்டி இன்றும் செயல்படுகிறது.2007ம் ஆண்டு வரை பதவிவகித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆன்டனோ சமரிஞ்ச் தற்போது “பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிதான், இதுவரை உலகில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே மிகச்சிறப்பானது’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். “பீஜிங்கில் இப்போதுள்ள பிரச்னைகளை சிலவற்றை கருத்தில் கொண்டாலும், பீஜிங்கை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை’ என்று தற்போதைய ஒலிம்பிக் கமிட்டி தலைவர், ஜேக்ஸ் ரோக் தெரிவித்துள்ளார். உலகை வலம் வந்த ஒலிம்பிக் ஜோதி பிரச்னைகளை சந்தித்தாலும் வெற்றிகரமாக தற்போது பீஜிங் திரும்பியுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டிகள்தான் முதன் முறையாக “ஹைடெபனிஷன் டெலிவிஷன்’ (எச்.டி.”டிவி’) முறையில் ஒளிபரப்பப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும். ஒலிம்பிக் போட்டிகளை 400 கோடிப் பேர் பார்ப்பார்கள் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சங்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறது. சாதனை புரியும் வீரர்களுக்கு இம்முறை இலக்குகள் கடினமாகவே இருக்கும். இம்மாத கடைசி வாரம் வரை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது.


தசவதாரம்

ஆகஸ்ட் 5, 2008

கமல் 10 வேடங்களில் நடித்த‌ ‘தசவதாரம்

அன்று


உலகின் மிக மெல்லிய லேப் டாப்.

பெப்ரவரி 8, 2008

ll

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

w

மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எனினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.

e

இந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.


நவீனத்தின் அடுத்த மைல்கல்.

பெப்ரவரி 8, 2008

bb

அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது )


சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் !

பெப்ரவரி 8, 2008

கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

1.

உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம்.

1

2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில்.

2

3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் )

3

4. உலகிலேயே மிக உயரமான நாய் 7′.2″ அதன் தோழனான 7.5 ” நாயுடன்

6

5. ஹூலா ஹூப்ஸ் என்னும் இவர் 144 கின்னஸ் சாதனைகளைச் செய்திருக்கிறார். இப்போது அவர் செய்து கொண்டிருப்பது 145 வதுக்கான முயற்சி.

7


இன்னிக்கு பிறந்த நாளு டோய்!

ஆகஸ்ட் 29, 2007

yyyyy

இன்று பிறந்த நாள் காணும் அருமை அண்ணன்சூப்பர் ஸ்டாரின் தம்பி -

thi

பத்திரிகையுலக சக்கரவர்த்திவலைப்பதிவு வித்தகர்சைதைச் சுனாமிபாசக்கிளிஎழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திருஉயர்உயர்திரு. திலிபன் என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்குயாழ்ப்பாணம் வாழ் – Colombo வாழ் – SriLanka வாழ்உலக வாழ் Theva.tk சார்பாக எங்களின் மனமார்ந்தஇதயப் பூர்வமானஉளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

tt


ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி

ஆகஸ்ட் 21, 2007
  1. va
  2.  ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ
  3. ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ
  4. ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ
  5. ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ
  6. ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ
  7. ஓம் ஆனந்த கணபதயே நமஹ
  8. ஓம் மஹா கணபதயே நமஹ
  9. ஓம் பால கணபதயே நமஹ
  10. ஓம் தருண கணபதயே நமஹ
  11. ஓம பக்த கணபதயே நமஹ
  12. ஓம் வீர கணபதயே நமஹ
  13. ஓம் ஸக்தி கணபதயே நமஹ
  14. ஓம் த்விஜ கணபதயே நமஹ
  15. ஓம் ஸித்தி கணபதயே நமஹ
  16. ஓம் உச்சிஷ்ட கணபதயே நமஹ
  17. ஓம் விக்ன கணபதயே நமஹ
  18. ஓம் ஷப்ர கணபதயே நமஹ
  19. ஓம் ஹேரம்ப கணபதயே நமஹ
  20. ஓம் லக்ஷ்மீ கணபதயே நமஹ
  21. ஓம் விஜய கணபதயே நமஹ
  22. ஓம் ந்ருத்ய கணபதயே நமஹ
  23. ஓம் ஊர்த்வ கணபதயே நமஹ
  24. ஓம் ஏகாக்ஷர கணபதயே நமஹ
  25. ஓம் வரகணபதயே நமஹ
  26. ஓம் த்யக்ஷர கணபதயே நமஹ
  27. ஓம் ஷப்ர ப்ரஸாத கணபதயே நமஹ
  28. ஓம் ஏகதந்த கணபதயே நமஹ
  29. ஓம் ஸ்ருஷ்டி கணபதயே நமஹ
  30. ஓம் உத்தண்ட கணபதயே நமஹ
  31. ஓம் ருணரோக விமோசன கணபதயே நமஹ
  32. ஓம் டுண்டி கணபதயே நமஹ
  33. ஓம் த்விமுக கணபதயே நமஹ
  34. ஓம் த்ரிமுக கணபதயே நமஹ
  35. ஓம் ஸிம்ஹ கணபதயே நமஹ
  36. ஓம் யோக கணபதயே நமஹ
  37. ஓம் துர்கா கணபதயே நமஹ
  38. ஓம் ஸங்கடஹர கணபதயே நமஹ
  39. ஓம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத வல்லப கணபதயே நமஹ
  40. ஓம் ஸுமுகாய நமஹ
  41. ஓம் ஏகதந்தாய நமஹ
  42. ஓம் கபிலாய நமஹ
  43. ஓம் கஜகர்ணிகாய நமஹ
  44. ஓம் லம்போதராய நமஹ
  45. ஓம் விகடாய நமஹ
  46. ஓம் விக்னராஜாய நமஹ
  47. ஓம் கணாதிபதயே நமஹ
  48. ஓம் தூமகேதவே நமஹ
  49. ஓம் கணாத்யக்ஷாய நமஹ
  50. ஓம் பாலசந்த்ராய நமஹ
  51. ஓம் கஜானனாய நமஹ
  52. ஓம் வக்ரதுண்டாய நமஹ
  53. ஓம் ஸூர்ப்பகர்ணாய நமஹ
  54. ஓம் ஹேரம்பாய நமஹ
  55. ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ
  56. ஓம் வல்லப கணபதயே நமஹ


நல்லூர் ஆலயப் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஆகஸ்ட் 18, 2007

nall

சரித்திரப்பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயப் பெருந்திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாள் கள் இடம்பெறும். வழமைபோன்று அல்லாமல் இம்முறை ஆலயத்திருவிழா மிகவும் அடக்கமான முறையில் இடம்பெறவுள் ளது.
பகல் உற்சவங்கள் சுவாமி உள்வீதி வருவதுடன் இடம்பெறும்.
மாலைத் திருவிழாக்களில் பி.ப. 4.45 மணிக்கு வெளிவீதி சுவாமி உலாவர நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவேளையில் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தே இது அமையும். எனினும் அனேகமாக வெளி வீதி உலா இடம்பெறும். மாலை 5.30 மணிக்கு திருவிழாக்கள் யாவும் பூர்த்தியடையும் என்று ஆலய நிர்வாகத்தினர் நேற்றிரவு தெரிவித்தனர். பெருந்திருவிழாவை முன்னிட்டு பக் தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு யாழ். மாநகராட்சி மன்றம் சுகாதார நடவடிக்கை கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களை ஆலயச் சூழலின் தூய்மையைப் பேணுமாறு கேட்கப்பட்டுள்ளது.
வெளிவீதியில் அங்கப் பிரதட்டை செய்யும் அடியவர்களின் நன்மை கருதி ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாடுவதை யும் சுகாதரத்திற்குப் பங்கமான ஏனைய செயற்பாடுகளையும் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருவிழா மிகவும் பக்திபூர்வமாகவும் அமைதியாகவும் இடம்பெற பக்தர்கள் அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
இதேவேளை,நேற்று முற்பகல் சட்ட நாதர் வீதியில் உள்ள தேரடி முருகன் மடத் திலிருந்து மங்களவாத்திய இசையுடன் நல்லூருக்கு கொடிச் சீலை ஊர்வல மாக எடுத்து வரப்பட்டது.