இது ஓர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி. இணையத் தளங்களில் மேய்ந்த போது சிக்கியது. நகைச்சுவைக நான் கண்டுகளித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்படி என்று ? பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்களேன்.
இம்சை அரசன் 23-ம் தேவசுப்பிரமணியம் அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
சேவகன் கட்டியம் கூறுகிறான்.
”ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்” தேவசுப்பிரமணியம்:- ,”அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடி சொல் பார்ப்போம்”
சேவகன்:- நடுங்கியபடியே,;;மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தப்பாகச் சொன்னதற்கு தண்டனையளித்தீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை வீட்டுப் பாடம் போல் எழுதி எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா”
தேவசுப்பிரமணியம்:-”அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் இன்னொருமுறை சொல்”
சேவகன்:-
‘ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்”என்றதும்
தேவசுப்பிரமணியம்:-”நிறுத்து இனி 23 தேவசுப்பிரமணியம் என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா அப்படியே 30 முறை எழுதிபழகு.”
தேவசுப்பிரமணியம்:-லகுடபாண்டி,’
லகுடபாண்டி:-‘மன்னா””என்னா”
”தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்”
தேவசுப்பிரமணியம்:-”நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா நான் மன்னனா நீயா‘ என முறைக்க,
”சரி சரி கோபப் படாதீர்கள்”
இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.
லகுட பாண்டி:- ”திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா.இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் [கண்ராவி] டூயட் பாட வேண்டிய நேரத்தில்? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?”
தேவசுப்பிரமணியம்:-,”அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்”
நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்”
லகுட பாண்டி:-”தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா”
தேவசுப்பிரமணியம்:-,”உடனே 6 பேரை பதி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்”
‘லகுட பாண்டி:-’மன்னா ஏன்…”
தேவசுப்பிரமணியம்:-,”ஹூம் கேள்வி கேட்காதே. அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் ”
லகுட பாண்டி:-”சில 32 ,30,28 இப்படி”
தேவசுப்பிரமணியம்:-,”சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.
லகுட பாண்டி:-ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி”
,”இன்னா நாற்பது,இனியவை நாற்பது …..”
தேவசுப்பிரமணியம்:-”நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்?”
லகுட பாண்டி:-”133 அதிகாரம் மன்னா”
”அதையும்…”
”மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளது” என்று லகுட பண்டி 30 ஐ அழுத்திச் சொல்ல
தேவசுப்பிரமணியம்:-”சரி சரி இருந்து விட்டு போகட்டும்”
சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறது‘அரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்‘
தேவசுப்பிரமணியம்:-”ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் மூன்னால் வா மகனே”
லகுட பாண்டி இந்த பண்டிதனுக்கு தகுந்த சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;
லகுட பாண்டி:-”26 மன்னா”
தேவசுப்பிரமணியம்:-”உடனடியாக இன்னும் 4 வருக்கு ஏற்பாடு செய்யும்”
லகுட பாண்டி:-”மன்னா இப்போதாவது கேட்கலாமா”
தேவசுப்பிரமணியம்:-”கேள்”
லகுட பாண்டி:-”திடீர்ரென்று உங்களுக்கு ஏன் 30 மேல் மோகம்”
தேவசுப்பிரமணியம்:-”ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹா…ஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்.
காளையை அடக்குகிறார் கைப்பு !
கைப்புள்ள=நம்ம ஜெயந்தன்
கைப்பு : எலே அம்புட்டு பேரும் இங்க வாங்கடா
அல்லக்கைகள் : என்னாணே ?
கைப்பு : பேசுறப்ப இப்படி குறுக்கப்பேசப்படாது
அல்லக்கைகள் : ???
கைப்பு : அது ! என்ன அம்புட்டுப் பயலும் ஆப்புவச்ச மாதிரி அடங்கிட்டானுங்க
அல்லக்கைகள் : அண்ணே நீங்க தானே அம்புட்டு பேரும் குறுக்கப் பேசப்படாதுன்னிங்க !
கைப்பு :அடேய் … ! இன்னிக்கு அண்ணன் என்ன செய்யப் போறார் தெரியுமா ?
அல்லக்கைகள் : அண்ணே சொல்லுங்கண்ணே !
கைப்பு : ஜல்லிக் கட்டு காள மாட்ட அடக்கப் போறேன்டா ….. அடக்கப் போறேன் !
அல்லக்கை : அண்ணே வேணாம்னே குத்தி போட்டுறும்…!
கைப்பு : டேய் சிங்கம் சீறி பார்ததில்லேன்னு சொன்னீல்ல நீய்யீ …!
அல்லக்கை : ஆமாம் ணே
கைப்பு : இன்னிக்கு பாரு
எல்லோரும் மாடுபிடிக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்
கைப்பு மனசுக்குள் ‘அடி ஆத்தி, மாடுகளுக்கு மூக்கணை போட்டு இருப்பாங்கன்னு நெனச்சி வாய வுட்டுடேனே. ஈட்டி மாதிரி கொம்பை சீவி வச்சிருக்கானுங்களே ம் விதியாரை வுட்டுச்சி’
அல்லக்கை : அண்ணே அதோ வருதுபாருங்கண்ணே அந்த மாட்டை பிடிங்கண்ணே
என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்
கைப்பு : அடேய் … டேய்…
சரி சமாளிப்போம் என்று நினைத்து
கைப்பு : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி..
என்று பாடிக் கொண்டே வேகமாக திரும்பி ஓடுகிறார்… சீறிப் பாய்ந்த காளை பின்னால் குத்தி தூக்கி எறிகிறது
கைப்பு : அய்…
அல்லக்கைகள் : வலிக்கிதாண்ணே ?
கைப்பு : டேய் வா இங்கே … வலிக்குதுண்ணு நான் உன்கிட்ட சொன்னேனா ?
அல்லக்கை : அண்ணே அண்ணே திரும்பவும் காளை உங்களைப் பார்த்து ஓடிவருது
கைப்பு மனசுக்குள் ‘அடி ஆத்தி அம்புட்டு பயலுகளும் பாத்துக்கிட்டே நிக்கிறானுங்களே… அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு’ என்று நினைத்துக் கொண்டு
கைப்பு : டேய் டேய் இப்ப பாரு அண்ணனை …
என்று காளையை முறைத்தபடி நிற்கிறார். திரும்பவும் முட்டி தூர எறிகிறது
மனதுக்குள் முனுகினாலும்
கைப்பு : பார்த்தியாடா… அண்ணன் எப்பிடி அசராமல் நிக்கிறேன்னு …
சொல்லி முடிப்பதற்குள் பின்னால் மறுமடியும் முட்டி கொம்பால் தூக்குகிறது
கைப்பு : வேணாம் உட்டுடு … அடங்கனும்
ஹூம் ஹூம் …மாடு தலையாட்டுது
கைப்பு : வேணாம் அப்பறம் … செல்லிட்டேன் வேணாம் …இந்த பக்கமே வரமாட்டேன் உட்டுடு…
மாடு தூக்கி எறிந்துவிட்டு காலால் மண்னைத் தள்ளி கைப்புவின் முகத்தில் அடித்துவிட்டு செல்கிறது.
கைப்பு : அது … அந்த பயம் இருக்கனும் …அடங்கனும்…!
காளை திரும்பிப் பார்த்து முறைக்க..
கைப்பு : தம்பி பேச்சி முத்து அண்ணன் ஒன்னிய சொல்லலப்பா… என்னிய சொல்லிக்கிட்டேன்
என்று மண்ணைத் தட்டிவிட்டு விட்டு தடுமாறி எழ முயற்சிக்கிறார்