“என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா”

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.
அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள”என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ராலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

தமிழ் கொலைவெறி – யாழ்ப்பாணம்
TAMIL KOLAIVERI JAFFNA VERSION

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா… – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு — தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!

ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் – தமிழில்..!
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் – தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல — அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.