நல்லூர் ஆலயப் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

nall

சரித்திரப்பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயப் பெருந்திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாள் கள் இடம்பெறும். வழமைபோன்று அல்லாமல் இம்முறை ஆலயத்திருவிழா மிகவும் அடக்கமான முறையில் இடம்பெறவுள் ளது.
பகல் உற்சவங்கள் சுவாமி உள்வீதி வருவதுடன் இடம்பெறும்.
மாலைத் திருவிழாக்களில் பி.ப. 4.45 மணிக்கு வெளிவீதி சுவாமி உலாவர நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவேளையில் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தே இது அமையும். எனினும் அனேகமாக வெளி வீதி உலா இடம்பெறும். மாலை 5.30 மணிக்கு திருவிழாக்கள் யாவும் பூர்த்தியடையும் என்று ஆலய நிர்வாகத்தினர் நேற்றிரவு தெரிவித்தனர். பெருந்திருவிழாவை முன்னிட்டு பக் தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு யாழ். மாநகராட்சி மன்றம் சுகாதார நடவடிக்கை கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களை ஆலயச் சூழலின் தூய்மையைப் பேணுமாறு கேட்கப்பட்டுள்ளது.
வெளிவீதியில் அங்கப் பிரதட்டை செய்யும் அடியவர்களின் நன்மை கருதி ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாடுவதை யும் சுகாதரத்திற்குப் பங்கமான ஏனைய செயற்பாடுகளையும் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருவிழா மிகவும் பக்திபூர்வமாகவும் அமைதியாகவும் இடம்பெற பக்தர்கள் அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
இதேவேளை,நேற்று முற்பகல் சட்ட நாதர் வீதியில் உள்ள தேரடி முருகன் மடத் திலிருந்து மங்களவாத்திய இசையுடன் நல்லூருக்கு கொடிச் சீலை ஊர்வல மாக எடுத்து வரப்பட்டது.

4 பதில்கள் “நல்லூர் ஆலயப் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்” க்கு;

  1. pragash சொல்வதென்னவென்றால்:

    hai.
    Nallathan irrukkuthu..
    Jaffna villa irunthu eluthinamathiri irukku..
    Sonnathu Thilepanoo?

    Thelepanukku -Happy Birth Day-
    Verenna , nadakkaddum nadakkaddum.

  2. theva சொல்வதென்னவென்றால்:

    வணக்கம் pragash வருகைக்கு நன்றி

  3. யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம் சொல்வதென்னவென்றால்:

    pragash தம்பியோ? முந்தி சிவப்பிரசாசம் வீதி முடக்கில இருக்கிற கோவிலில தவில் அடிச்சிருப்பாரோ ? பழக்க தோசம் போல விட்டிருங்கோ.

  4. pragash சொல்வதென்னவென்றால்:

    Ado Sundram……..uncle…
    Where is that Sivapragasam road? i hav no idea about that.
    If there is any news @ sivapragasam raad -Nadkkaddum Nadkkaddum.
    Best of Luck to continue.
    Pragash A/L 200?… -From Vadakku

மறுமொழி இடுக