என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா

ஜனவரி 2, 2012

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.
அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள”என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ராலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

http://youtu.be/7-GmD7hxDy0


யு-ட்யூப் (You Tube) : வயது ஐந்து

மே 5, 2010

இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம்.

முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். ‘Me at the Zoo’ என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் ஏப்ரல் 23 அன்று பதிந்தார். சென்ற வாரம் இதன் ஐந்தாவது ஆண்டுவிழா நிறைவேறியது. தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம்.

திரைப்படங்கள் தயாரிப்பவர்கள் கூட இதில் தங்கள் பட பைல்களைப் பதிந்து, இலவசமாகவும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையிலும் தர முன்வந்துள்ளனர். யு–ட்யூப் தளமும் அண்மையில் அமெரிக்கா நாட்டில் மட்டும், கட்டணம் செலுத்தி வீடியோ பைல்களை வாடகைக்கு விடும் திட்டத்தினை இந்த தளத்தில் ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து அனைத்து நாட்டிற்கும் இது விரிவாக்கம் செய்யப்படுமானால், தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் கூட்டம் குறையலாம். ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய யு–ட்யூப் தளத்திற்கு நாமும் வாழ்த்துக்களைக் கூறுவோம்.


இந்துவின் மைந்தர்களுக்கு ஓர் இனிய செய்தி……….

ஜூன் 23, 2009

இந்துவின் மைந்தர்களுக்கு ஓர் இனிய செய்தி சொந்த வீட்டின் சுகம் எந்த வீட்டிலும் இல்லை அல்லவா? சுகம் தர நாம் தயார் சுமந்திட நீங்கள் தயாரா? எமது கற்பனை எமது செயல் எமது பதிவுகள் நம்மோடு நாம் இருந்த காலம் எண்ணோடும் எழுத்தோடும் போனதல்ல எல்லை தாண்டியும் எமை இணைத்திடும் இவ் இணையத்தளம்

ஆக்கங்கள் பதிவோம் அரட்டையும் பதிவோம் அங்கங்கே அந்தரங்கமும் பதிவோம்போட்டிகள் வைப்போம் நல்ல பரிசிலும் தருவோம் புது யுகம் படைப்போம் புறப்படுவோம் இப்போதே………………………………….

jhc

jhc

Register Now

http://www.ourjhc.com/invite.php?u=29&c=911e4e6cdb96dd5c

web:-http://www.ourjhc.com/index.php


இது திருட்டு விசிடி அல்ல-இது மென்பொருள் வல்லுனர் நம்ம தேவாவின் திருவிளையாடல்-;)-வீடியோ

ஆகஸ்ட் 19, 2008

2008 ஒலிம்பிக் கோலாகலமாக துட‌ங்கியது

ஆகஸ்ட் 8, 2008

பீஜிங் : உலகின் 660 கோடி மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கும் ஒரே விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலை நகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கியது. சீனர்களுக்கு 8 எனும் எண் மிக ராசியானதாகக் கருதப்படுவதால், துவங்கும் தேதி மற்றும் நேரம் எல்லாமே 8 தான். இரவு 8 மணி 8 நிமிடம் 8 வினாடிக்கு துவக்க விழா நடைபெற்றது. கனடாவின் செலின் டியோன் தைவானின் ஜே ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் திறமையை வெளிப்படுத்தினர்.

ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன. சீனாவிலிருந்து அதிகபட்சமாக 639 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து 596 வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இதற்குமுன்பு இவ்வளவு பேர் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்றது இல்லை. இந்தியாவிலிருந்து 55, பாகிஸ்தானிலிருந்து 21, இலங்கையிலிருந்து 8 வீரர்களும் பங்கேற்கின்றனர். டோகோ, நவ்ரு உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து குறைந்தபட்சமாக தலா ஒரு வீரர் பங்கேற்கிறார்.

பீஜிங்கில் நடைபெறும் போட்டிகளை தவிர, ஹாங்காங்கில் குதிரையேற்றப் போட்டிகள் நடக்கின்றன. ஆகவே, ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன் முறையாக இரு தேசிய ஒலிம்பிக் கமிட்டி இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்றன. சீனாவுடன் ஹாங்காங் இணைந்துவிட்டாலும், அப்பகுதிக்கான ஒலிம்பிக் கமிட்டி இன்றும் செயல்படுகிறது.2007ம் ஆண்டு வரை பதவிவகித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆன்டனோ சமரிஞ்ச் தற்போது “பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிதான், இதுவரை உலகில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே மிகச்சிறப்பானது’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். “பீஜிங்கில் இப்போதுள்ள பிரச்னைகளை சிலவற்றை கருத்தில் கொண்டாலும், பீஜிங்கை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை’ என்று தற்போதைய ஒலிம்பிக் கமிட்டி தலைவர், ஜேக்ஸ் ரோக் தெரிவித்துள்ளார். உலகை வலம் வந்த ஒலிம்பிக் ஜோதி பிரச்னைகளை சந்தித்தாலும் வெற்றிகரமாக தற்போது பீஜிங் திரும்பியுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டிகள்தான் முதன் முறையாக “ஹைடெபனிஷன் டெலிவிஷன்’ (எச்.டி.”டிவி’) முறையில் ஒளிபரப்பப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும். ஒலிம்பிக் போட்டிகளை 400 கோடிப் பேர் பார்ப்பார்கள் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சங்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறது. சாதனை புரியும் வீரர்களுக்கு இம்முறை இலக்குகள் கடினமாகவே இருக்கும். இம்மாத கடைசி வாரம் வரை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது.


தசவதாரம்

ஆகஸ்ட் 5, 2008

கமல் 10 வேடங்களில் நடித்த‌ ‘தசவதாரம்

அன்று


பணம் பண்ணலாம்

ஆகஸ்ட் 3, 2008

Depacco.com

http://www.thevatk.blogspot.com/

http://www.j-kanth.blogspot.com/


வித்தியாசமான‌ சிலைகள்

ஜூலை 16, 2008

ஒவ்வொரு சிலையும் என்ன செல்லுகிறது


விரைவில் வெளிவரும் Windows 7 தொகுப்பு

ஜூலை 16, 2008

மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய ஒப்ரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடும் முன் அது குறித்த தகவல்களை கசிய வைத்திடும், அல்லது வெளியிடும் முன் மிகப்பெரிய அள்வில் விளம்பரம் செய்திடும். மைக்ரோசொப்ட் நிறுனனத்தின் அடுத்த விண்டோஸ் ஒப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான இன்றைய பெயர் விண்டோஸ்-7. விண்டோஸ் விஸ்டாவிற்கு அடுத்த சிஸ்டமாக விண்டோஸ் -7 வர இருக்கிறது. முதலில் இதற்கு வியன்னா என்றும் ப்ளாக் கோம் என்றும் பெயர்கள் இடப்பட்டன.

இது வரும் 2010ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தத் தொகுப்பு வரும் 2009ஆம் ஆண்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்ரேட்டிங் சிஸ்டம் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமன அறிவிப்பு எதுவும் வரவில்லை டஎன்றாலும், இந்த தொகுப்பின் 32 பிட் ம்ற்றும் 64பிட் என இரு வகை கிடைக்கும் என்று தெரிகிறது.

இந்த பதிப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய சில வசதிகள் தரப்படலாம். இதில் பேக் அப் வசதிகளும், புதிய வகையிலான கண்ட்ரோல் பேன்ல் அம்சங்களும் கிடைக்க இருக்கின்றன. வினண்டோஸ் எக்சஸ் புளோரர் தொகுப்பு ௮ இத்துடன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இது எப்படி இருக்கிறது???

ஜூலை 12, 2008

(நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது)


Follow

Get every new post delivered to your Inbox.